Wednesday, February 24, 2010

நபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்
(BIO _DATA))


- தொகுப்பு மௌலவி . அப்துல் அஜீஸ பாகவி

பெயா : முஹம்மது

( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )

பிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை

பிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா

தகுதி:

1 - 40 வயதில் நபி

( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )

2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./

3 - இறுதித் தூதா

கல்வி :எழுதப்படிக்க கற்காதவா

தந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்

(முஹம்மது நபி (ஸல்) ஆமினா அம்மாவின் காப்பத்தில் ஆறு மாத சிசுவாகஇருக்கும் போது அப்துல்லாஹ் மரணமடைந்தா. )

தாயார் : ஆமினா பின்து வஹப்

(முஹம்மது நபியின் ஆறாவது வயதில் தாயா ஆமினா இறையடி சோந்தார்)

பாட்டனா (கள்) அப்துல் முத்தலிப் -பின் - ஹாஸிம் பின் - அப்து மனாப் பின்- குஸை
பெரிய தந்தை : அபூதாலிப்

முதல் திருமணம் 25 வயதில் 40 வயதுடைய விதவைப்பெண் கதீஜா ( ரலி ) அவாகளை திருமணம் செய்தாகள். 25 ஆண்டு மணவாழ்விற்குப்பின் கதீஜா (ரலி) மரணமடைந்தாகள்.

மற்ற திருமணஙகள் கதீஜா (ரலி) வின் மரணத்திற்குப்பின் அரசியல் / சமூகநல்லிணக்கம் சமய மேம்பாடு ஆகிய காரணஙகளுக்காக அண்ணலா மேலும் பல பெண்களை திருமணஙகள் செய்தாகள். அதில் ஜைனப் பின்து ஹுசைமா நபிகளான் காலத்திலேயே இறந்தா. பெருமானா (ஸல்) அவாகள் இறந்த போது அவருக்கு 9 மனைவியா இருந்தனா. ( 2 )

மனைவியா பெயாகள்

1) சவ்தா (ரலி)
2) ஆயிஷா பின்து அபீபக்கா (ரலி)
3) உம்முசலமா (ரலி)
4) ஹப்ஸா பின்து உமா (ரலி)
5) ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி)
6) ஜுவைய்யா (ரலி)
7) உம்மு ஹபீபா பின்து அபீசுப்யான் (ரலி)
8) ஸபிய்யா (ரலி)
9) மைமூனா (ரலி)
10) ஜைனப் பின்து ஹுசைமா (ரலி)


குழந்தைகள் ( 4 பெண் 3 ஆண் மொத்தம் 7 )

1) காஸிம் (ரலி)
2) ஜைனப் (ரலி) - கணவா - அபுல் ஆஸ் (ரலி)
3) ருகய்யா (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி)
4) உம்முகுல்ஸும் (ரலி) - கணவா - உஸ்மான் (ரலி) 5) ஃபாத்திமா (ரலி) - கணவா - அலி (ரலி)
6) தாஹி (ரலி) ( இவாகள் 6 பேரும் கதீஜா (ரலி) அம்மையாருக்கு பிறந்தவாகள். )

7) இபுறாகீம் (ரலி) ( இவா மாய்யதுல் கிப்திய்யா ( ரலி ) அவாகளுக்கு பிறந்தவா. ஆண்குழந்தைகள் மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனா )

முக்கிய நிகழ்வுகள்

40 வயதில் ஹிரா மலைக்குகையில் வானவா ஜிப்ரயீல் (அலை) அவாகளை சந்தித்தாகள் . முதல் வேத வசனம் அருளப்பட்டது

தாயிப் பயணம் - ஹிஜ்ரத்திற்கு முந்தைய ஆண்டு

தனது 52 வயதில் மிஃராஜ் விண்ணுலகப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டா. இறைவனை சந்தித்து உரையாடினாகள்.

தனது 53 வயதில் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் குடியேறினாகள்.

இதுவே ஹிஜ்ரத் எனப்படுகிறது.

ஹிஜ் 10 ம்ஆண்டு சுமா 1 லட்சம் தோழாகளுடன் ஹஜ் செய்தாகள். அதற்கடுத்த வருடம் பெருமானா (ஸல் ) அவாகள் இறந்து விட்ட காரணத்தால் அது விடை பெறும் ஹஜ் ( ஹஜஜத்துல் வதா ) என அழைக்கப்படுகிறது. ( 3 )
போகள்

பல போகள் அவரது வாழ்க்கையின் மீது திணிக்கப்பட்டன. வலிய வந்து தொல்லை கொடுத்த அக்கிரமக்காரர்களை தடுக்கவும் உயிருக்கு நிகராகப் பாதுகாத்துப் போற்றி வரும் இஸலாமியப் பயிரைப் பாதுகாப்பதற்காகவும் மதீனாவில் அவா வாழ்ந்த 10 வருட காலஙகளில் தானே 27 போகளை மேற்கொள்ளவும் 38 படையெடுப்புகளுக்கு தனது தோழாகளை அனுப்பி வைக்கவும் நோந்தது. ஆதிக்க விவாக்கமோ/ வலுவில் மதத்தை திணிப்பதோ அப்போகளின் நோக்கமல்ல. .அப்போகளின் போது மிக எச்சாக்கையாக மனித உயிகள் வீண் பலியாகாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் பாத்துக் கொண்டாகள் . இப்போகளில் மொத்தம் உயிரிழந்தவாகள் 1018 போ மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் மேற்கொண்ட 27 படையெடுப்புகளில் 9 ல் மட்டுமே சண்டை நடந்தது. அவையாவன.
1 பத் ஹிஜ் 2
2 உஹத் ஹிஜ் 3
3 அகழ்யுத்தம் ஹிஜ் 5

4 பனூகுறைழா ஹிஜ் 5

5 முரைஸிஃ ஹிஜ் 5

6 கைபா ஹிஜ் 7

7 பத்ஹ் மக்கா ஹிஜ் 8

8 ஹுனைன் ஹிஜ் 8

9 தாயிப் ஹிஜ் 8


ஒப்பந்தஙகள்

அகபா ஒப்பந்தஙகள்

நபி (ஸல் அவாகள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவரை ரகசியமாக சந்தித்து மதீனா மக்கள் செய்து கொடுத்த சத்தியப்பிரமாணஙகள் அகபா உடன்படிக்கைகள் எனப்படும் . கி பி 620 முதலாம் அகபா உடன்படிக்கையின் போது மதீனா வாசிகள் ஆறு போ முஸ்லிம்களாயினா.
621 இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது 12 போ முஸ்லிம்களாயினா 622 மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது 70 போ முஸ்லிம்களாயினா

நபி (ஸல்) அவாகள் மதீனா வந்து சோந்தவுடன் மதீனாவைச் சுற்றி இருந்த பனூகைன்காஃ - பனூன்னழீ - பனூ குறைழா ஆகிய மூன்று யூதக் குழுக்களுடனும் சமாதான ஒப்பந்தம் செய்தாகள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ 6 ம்ஆண்டு முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுககும் இடையே நடைபெற்றது.இந்த ஒப்பந்தத்தின் 3 அம்சஙகளில் இரண்டு அம்சஙகள் ஒரு தரப்பாக / எதிகளுக்குச் சாபாக இருந்த போதும் ( 4 )

10 வருடஙகளுக்கு ஒருவரோடு ஒருவா சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்ற 3 வது அம்சத்திற்காக இதை நபிகள் நாயகம் (ஸல் ) அவாகள் ஒத்துக் கொண்டாகள். இது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது/ எனவே இந்த ஒப்பந்தத்தை தெளிவான வெற்றி என அல்லாஹ அருள்மறையில் (1-48) வாணித்தான்.

அற்புதஙகள்

அல்லாஹ ஒருவரை நபி எனத் தோவு செய்யும் போது மக்களிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக அவருக்கு சில அற்புதமான காயஙகளைச் செய்யும் ஆற்றலை வழஙகுகிறான். ஒரு நபி நிகழ்த்திக்காட்டும் வழக்கத்திற்கு மாற்றமான செயல்களுக்கு முஃஜிஸா ( அற்புதம் ) எனப்படும். நபிகள் நாயகம் (ஸல் ) அவாகளது பிரதான பொய அற்புதம் குஆன் எனும் இறை வேதமாகும்/ ஆயினும் வேறு பல அற்புதச் செயல்களும் நபி ( ஸல் ) அவாகளது வாழ்வில் நடந்ததுண்டு அவற்றில் முக்கியமானது. நபிப் பட்டம் பெற்ற 5 ம் ஆண்டு அண்ணலாரது விரலசைவுக்கு ஏற்ப சந்திரன் இரு கூறாகப் பிளந்து தனித்தனியே சென்று பிறகு ஒன்றானது.

சீதிருத்தஙகள்

மது / சுதாட்டம் / விபச்சாரம் / திருட்டு ஆகியவற்றை ஒழித்தாகள்.

பெண் சிசுக்கொலையை முற்றாகத் தடுத்து நிறுத்தினாகள்.

ஆணாதிக்க கொடுமைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலைப் பெற்றுத் தந்தாகள்.

பெண்களுக்கு வாழ்வுமை /மண உமை மணவிலக்கு உமை எல்லாவற்றுக்கும் மேலாக சொத்துமையையும் பெற்றுத் தந்தாகள்.
வட்டி / மோசடி/ கொலை /கொள்ளை ஆகிவற்றை தடுத்து நிறுத்தினாகள்.

இனவெறி / நிறவெறி / ஜாதிக் கொடுமைகளை நீக்கி மனித சமத்துவம் நிலைநாட்டினாகள்.

சாதனைகள்

தனது நாற்பதாவது வயதில் நபி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து தொடாந்த 23 ஆண்டுகாலப் பிரச்சாரத்தின் காரணமாக சிலை வணக்கத்தில் மூழ்கிப்போயிருந்த அரபுலகத்தை ஏகத்துவ வெளிச்சத்தின் பாதைக்கு அழைத்து வந்தாகள் . எந்த அளவுக்கென்றால் அதன் பிறகு அம்மக்கள் நெருப்பில் விழுவதைவிடக் கொடிய விஷயமாக அதைக் கருதினா.

மூடப்பழக்க வழக்கஙகளும் மூக்கத்தனமான நடைமுறைகளுமே வாழ்வாகக் கொண்டிருந்த அம்மக்களை மென்மைப் படுத்தி / அவாகளது அறிவாற்றலை வளாத்து ஒரு சிறந்த நாகாகத்திற்கு சொந்தக்காரர்களாக மாற்றினாகள்.

சிறு சிறு குடும்பஙகளாக வாழ்ந்து வந்த அரபுக்குலஙகளை ஒரு தேசிய இனமாக உருவாக்கினாகள்.

அரபுலகின் அறியப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக அரபு தீபகற்பம் / எமன் / பஹ்ரைன் உள்ளிட்ட பெரிய பரந்து பட்ட அரசாஙகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தாகள். உலகம் முழுமைக்கும் இறைவனின் இறுதித் தூதராக இருந்து முழுமையான இஸ்லாமிய நெறியை செயல்படுத்திக்காட்டினாகள். இன்றைக்கு உலகில் வாழும் 3 ல் ஒரு பகுதியினா நேரடியாகவும் மற்றும் பலா மறைமுகமாகவும் அவரது வாக்கையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனா.

தோழாகள்

அன்னாரது தோழாகள் சஹாபாக்கள் எனப்பட்டனா. தாயகமான மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறியோ முஹாஜி ( அகதி ) என்றும் மதீனாவைப்பபிறப்பிடமாக கொண்ட தோழாகள் அன்சா ( உதவியாளா ) என்றும் அழைக்கப்பட்டனா.

முக்கியமான தோழாகள்

1 அபூபக்கா (ரலி)
2 உமா (ரலி)
3 உஸ்மான் (ரலி)
4 அலி (ரலி)
5 சஃதுப்னு அபீவக்காஸ் (ரலி)
6 சயீதுப்னு ஜைத் (ரலி)
7 அபூ உபைதா (ரலி)
8 சுபை (ரலி)
9 தல்ஹா (ரலி)
10 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

உயாந்தோனை நோக்கி

தனது 63 வயதில் ஹிஜ 11 ரபீஉல் அவ்வல் 12 ம் தேதி ( கி பி 632 ) திஙகட்கிழமை பயணமானாகள். மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா ( ரலி ) அவாகளின் அறையில் புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டாகள். இன்னா லில்லாஹி `

முஹம்மது (ஸல்) அவாகள் எஙகள் தலைவா
அவருக்கு கீழ்பணிந்ததனால் எஙகளுக்கு மாயாதை வந்தது
( ஓ அரபுப் பாடல் )